இரு தலைகளும் தனி தனியாக இயங்கும் அரிய வகை பாம்பு.! வைரலாகும் வினோத வீடியோ..!Vinotha two head snake

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள டென்கிகோட் வனப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு தலைகளுடன் பாம்பு ஒன்று தென்ப்பட்டதை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனை அடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று பாம்பை பிடித்துள்ளனர்.

அந்த பாம்பு ஓநாய் வகையை சேர்ந்தது என்றும், விஷத்தன்மை அற்றது என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இரண்டு தலைகளும் தனி தனியாக இயங்குகின்றன. இந்த அரிய வகை வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

snake

மேலும் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.