காங்கிரஸ்க்கு குட்பை.! பாஜகவுக்கு தாவிய பிரபல குத்துசண்டை வீரர் விஜேந்தர் சிங்!!

காங்கிரஸ்க்கு குட்பை.! பாஜகவுக்கு தாவிய பிரபல குத்துசண்டை வீரர் விஜேந்தர் சிங்!!



vijenthar-singh-jumped-to-bjp-from-congress

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களுக்கு தேர்தல் துவங்குகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தற்போது காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவியுள்ளார்.

இவர் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார். 2009ம் ஆண்டு  குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். மேலும் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

bjp

தொடர்ந்து காங்கிரஸில் இணைந்த அவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியிடம் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில், உத்திர பிரதேசம் மதுரா தொகுதியில் நடிகை ஹேமாமாலினியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களமிறங்குவார் என கூறப்பட்டது.

இந்த நிலையிலேயே அவர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பாஜக கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து விஜேந்தர் சிங் கூறுகையில், தேசத்தின் நலனுக்காக மக்களுக்கு சேவை செய்வதற்காக நான் பாஜகவில் இணைந்துள்ளேன். இது எனது வீட்டிற்கு திரும்பியது போன்ற உணர்வை எனக்கு தருகிறது. தொடர்ந்து மக்களுக்கு உதவ விரும்புகிறேன் என கூறியுள்ளார்.