
vijay mallaya come to india
இந்திய வங்களில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. இந்தநிலையில் விஜய் மல்லையாவைஇந்தியாவிற்கு அனுப்ப இங்கிலாந்து ஒப்புதல் அளித்துள்ளது.
அஇதுதொடர்பான வழக்கில் மல்லையாவை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்தியாவில் வங்களில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி கொண்டு அதை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றார் விஜய் மல்லையா.
இதனைத் தொடா்ந்து மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மல்லையா தொடா்பான பொருளாதார குற்ற வழக்குகளை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், லண்டன் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, மல்லையாவை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் கையெழுத்திட்டார். நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement