அபிநந்தனை அடித்து துன்புறுத்தும் பாக்.ராணுவம்! பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்

அபிநந்தனை அடித்து துன்புறுத்தும் பாக்.ராணுவம்! பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்


Video of abhinandan attacked by pak army

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப் படை நேற்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாகிஸ்தான் விமானப்படை இன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

அதனால், இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த அபிநந்தன் இன்னமும் திரும்பவில்லை. அவர் சென்ற போர் விமானம் விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது. காணாமல் போன இந்திய விமானி, தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Pakistan

மேலும், இந்திய ராணுவ விமானி அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை அடித்து உதைக்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்களை பார்க்கும் போது நிச்சயம் இந்தியர்கள் அனைவருக்கும் இரத்தம் கொதிக்கும். மேலும் அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.