இந்தியா லைப் ஸ்டைல்

சாக்கடை நீரில் மிதக்கும் காய்கறிகள்..! தள்ளுவண்டியில் விற்பனை செய்யும் நபர்.! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

Summary:

Vegetable Vendor Is Spotted Picking His Vegetables From Drainage

தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் நபர் ஒருவர், கழிவுநீர் கால்வாயில் காய்கறிகளை கழுவி, அதனை தள்ளுவண்டியில் வைத்து விற்பனைக்கு எடுத்துச்செல்லும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என விவரம் ஏதும் வெளியாகவில்லை. சுமார் ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் தனது வண்டியில் இருக்கும் காய்கறிகளை எடுத்து அருகில் இருக்கும் சாக்கடை நீரில் கழுவி, அதை மீண்டும் தனது தள்ளுவண்டியில் அடுக்கிவைத்து விற்பனைக்கு செல்கிறார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்த நிலையில், அவரை பின்தொடர்ந்து வண்டியில் இருக்கும் காய்கறிகளை குப்பையில் கொட்டி அவரிடம் சண்டை போடுகின்றனர். தள்ளுவண்டியில் வரும் காய்கறிகள் புதிதாகவும், விலைகுறைந்ததாகவும் இருக்கும் என்று நம்பி வாங்கும் மக்களுக்கு இந்த வீடியோ மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement