அரசியல் இந்தியா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96வது பிறந்தநாள்.! பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மரியாதை.!

Summary:

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 96வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் பாஜகவின் முக்கிய முகமாகவும் பார்க்கப்படுபவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய். 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த வாஜ்பாய் 9 முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவர் பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியை தேசிய நல்லிணக்க நாளாக பாஜக அரசு சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.

இந்நிலையில், டெல்லியில் வாஜ்பாய் நினைவிடம் அமைந்துள்ள ”சதைவ் அதல்” பகுதிக்கு இன்று காலையிலேயே சென்று பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தி வணங்கினர்.


இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டமைக்க அவர் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் என்றும் கூறி உள்ளார்.


Advertisement