அதிர்ச்சி... துரோகம் செய்த கள்ளகக்காதலன்... அந்த இடத்தை நறுக்கிய இளம் பெண்.! காவல்துறை வலை வீச்சு.!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் தன்னை ஏமாற்றிய கள்ளக்காதலனின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திர பிரதேசம் மாநிலத்தின் கிராமம் ஒன்றைச் சார்ந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணம் நடைபெற்று இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அண்டை வீட்டைச் சார்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
இந்த கள்ளக்காதல் ஜோடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஜோடியிடம் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கின்றனர். அந்தப் பெண் தன் கணவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து இருக்கிறார்.
மேலும் தனது கள்ளக்காதலன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அவர் மீது கடும் ஆத்திரத்திலும் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு ரகசியமாக வந்த கள்ளக்காதலன் மீண்டும் உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கள்ளக்காதலனின் பிறப்புறுப்பை அறுத்துள்ளார். வலி தாங்க முடியாமல் கத்திய அந்த இளைஞனின் குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தரங்க உறுப்பை வெட்டி விட்டு தப்பி ஓடிய அந்த பெண்ணை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.