கொரோனா எச்சரிக்கை.. வீதியில் உலா வரும் எமராஜா.. உத்தரகாண்ட் போலீசார் புதிய முயற்சி!

கொரோனா எச்சரிக்கை.. வீதியில் உலா வரும் எமராஜா.. உத்தரகாண்ட் போலீசார் புதிய முயற்சி!


Uttarkand police dreased up yemraj in haridwar street

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 24 ஆம் தேதி அறிவித்தார். மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி ஒருசிலர் வெளியில் நடமாடி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில காவல் துறையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Coronovirus

இந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் காவல் துறையினர் ஒரு புதிய முயற்சியினை கையாண்டுள்ளனர். அவர்கள் நாடக கலைஞர் ஒருவருக்கு எமராஜா வேடமணிந்து வீதியில் நடமாட வைத்தும் கொரோனா குறித்து எச்சரிக்கை வசனங்களை பேச வைத்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்துக்களின் கடவுளான எமராஜா மனிதர்களின் ஆயுள் கணக்கினை முடித்து உயிர்களை பறிப்பவர் என்பது நம்பிக்கை. ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் நடமாடினால் எமராஜா உங்கள் உயிரை பறித்துவிடுவார் என எச்சரிப்பதற்காக ஹரித்துவார் போலீசார் இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.