அதிகாலையில் நடந்த கோர விபத்து! அமைச்சரின் மகன் உட்பட மூன்று பேர் மரணம்!

அதிகாலையில் நடந்த கோர விபத்து! அமைச்சரின் மகன் உட்பட மூன்று பேர் மரணம்!


uttarakhand minister son died in accident


உத்தரகண்ட்  மாநில அமைச்சர் அரவிந்த் பாண்டேவின் மகன் அங்கூர் பாண்டே உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூர் அருகே கார் விபத்தில் இறந்தார்.

அமைச்சர் அரவிந்த் பாண்டேவின் மகன் உள்ளிட்ட நான்கு பயணித்த கார், இன்று அதிகாலை 3 மணியளவில் ஃபரித்பூர் அருகே என்.எச் 24 சாலையில் சென்றுகொண்டிருந்த பொழுது. திடீரென லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ரவிந்த் பாண்டேவின் மகன் அங்கூர் பாண்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 இந்த விபத்தில் அவருடன் பயணித்த இரண்டு பேர்  இறந்தனர், ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள கோரக்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.