மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
நாடே அதிர்ச்சி..! 2 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் கணவருடன் தற்கொலை; அனாதையான 3 குழந்தைகள்..!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாஸ்டி மாவட்டம், கோரக்பூர் ருதௌலி கிராமத்தில் தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த செப் 20ம் தேதி இரவு, தம்பதியில் மனைவி 2 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
நிலத்தகராறு தொடர்பான விஷயத்தில் பெண்மணி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த விசயத்தை கணவருடன் பகிர்ந்துகொண்ட பெண்மணி, என்ன செய்வது என தெரியாமல் இருந்துள்ளனர்.
மேலும், இதுகுறித்த மன வேதனையில் தம்பதிகள் விழிபிதுங்கி இருக்கின்றனர். இறுதியில் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்து இருக்கின்றனர்.
தங்களின் தற்கொலைக்கான காரணமாக செல்போனில் வீடியோ பதிவு செய்து பின் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதிகாலையில் தம்பதிகளை மீட்ட குடும்பத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
அங்கு இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தம்பதிகளின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, இக்குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். தம்பதிகளுக்கு 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு ஆண்கள், ஒரு வயதுடைய பெண் குழந்தை என 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.