
கூட்டுபலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரணை பெயரில் சீரழித்த காவலர்... உ.பியில் பயங்கரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமி, கடந்த ஏப்ரலில் போபாலுக்கு கடத்தி செல்லப்பட்டு 4 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, சிறுமி மீண்டும் அவரின் சொந்த கிராமத்திற்கே அழைத்து வரப்பட்டுள்ளார்.
வரும் வழியிலும் சிறுமியை காரிலேயே சீரழித்த கயவர்கள், சிறுமியின் கிராமம் அருகே அவரை இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கண்ணீருடன் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
சமீபத்தில் சிறுமியின் வீட்டிற்கு சென்றிருந்த அவரின் உறவினர் சூழ்நிலையை புரிந்துகொண்ட புகார் அளிக்க காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த லலித்பூர் காவல் நிலைய அதிகாரி திலக்தாரி சரோஜ், மறுநாள் சிறுமியை வரச்சொல்லியுள்ளார்.
காவல் நிலையம் சென்ற சிறுமியிடம் விசாரணை நடத்துவதாக காவல் அதிகாரி திலக்கும் அறைக்கு அழைத்துசென்று கத்தி முனையில் வாயில் துணிவைத்து பலாத்காரம் செய்துள்ளார். மனதளவிலும், உடலளவிலும் நொந்துபோய் வந்த சிறுமியை கண்டு சுதாரித்த உறவினர், எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, புகாரை ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர் திலக்தாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு, அவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், காரில் கடத்தி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கும்பலுக்கும் வலைவீசப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement