கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் சுட்டுக்கொலை; வன்முறையில் இறந்ததாக சித்தரிப்பு.. உ.பியில் அதிரவைக்கும் சம்பவம்.!

கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் சுட்டுக்கொலை; வன்முறையில் இறந்ததாக சித்தரிப்பு.. உ.பியில் அதிரவைக்கும் சம்பவம்.!


Uttar Pradesh man Killed by Constable and his Team When He Affair With Wife 


உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹால்டவாணி, வன்போல்புரா பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, அங்கு வெவ்வேறு இடங்களில் 6 இடங்களில் இருந்து காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டெடுத்தனர்.

இதில் 5 பேர் வன்முறையால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரகாஷ் என்பவரின் கொலையில் மட்டும் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரின் தலையில் 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அடையாளமும் தென்பட்டு இருக்கிறது. 

இதனையடுத்து, சம்பவ தொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்தபோது, பிரகாஷ் கள்ளக்காதல் பிரச்சனையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது, அங்குள்ள நைனிடால் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் வீரேந்திரா. 

இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். வீரேந்திராவின் மனைவிக்கும் - ப்ரகாஷுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தை அறிந்த காவலர் வீரேந்திரா, தனது மைத்துனர் மற்றும் அவரது நண்பர்களை ஏவி பிரகாஷை கொலை செய்துள்ளார். அதற்கு அங்கு நடந்த வன்முறையை தனக்கு சாதகமாக்கி, உடலை வன்முறை நடந்த இடத்தில் விட்டுச்சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.