கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வாகனங்கள் மீது மோதி விபத்து.. 5 பேர் பரிதாப பலி..! Uttar Pradesh Kanpur Tat Mills Road Bus Accident 5 Died

சாலையில் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஏற்படுத்திய விபத்தில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், டாட் மில் சாலை பகுதியில் மின்சார பேருந்து பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த பேருந்து டாட் மில் அருகே செல்கையில், எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் சென்று கொண்டு இருந்த கார், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் மோதி நின்றுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

Uttar pradesh

இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.