மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனின் பதறவைக்கும் செயல்.. அதிர்ச்சி சம்பவம்.!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனின் பதறவைக்கும் செயல்.. அதிர்ச்சி சம்பவம்.!


Uttar Pradesh husband killed wife

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரசூல்பூர், நயா பகுதியில் 28 வயது நபர், தனது 26 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். தம்பதிகளுக்கு 5 மற்றும் 7 வயதுடைய குழந்தைகள் இருக்கின்றனர். 

இந்த நிலையில், கணவருக்கு மனைவியின் மீது சந்தேகம் இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இது தொடர்பாக அவ்வப்போது சண்டையும் நடந்து வந்துள்ளது. 

இன்று, கணவன் - மனைவியிடையே இதுதொடர்பான பிரச்சனை எழுந்துகொள்ளவே, ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கிறார். 

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தப்பி செல்ல முயன்ற கணவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.