கருமம்.. ச்சீ.. சிகையலங்கார நிபுணர் பெண்ணின் தலையில் எச்சில் உமிழ்ந்தால் அதிர்ச்சி.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

கருமம்.. ச்சீ.. சிகையலங்கார நிபுணர் பெண்ணின் தலையில் எச்சில் உமிழ்ந்தால் அதிர்ச்சி.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!


Uttar Pradesh Hair Stylist Jawed Habib Split Woman Hair Video Issue

சிகையலங்காரம் செய்யும் நிபுணர் பெண்ணின் தலையில் எச்சிலை துப்பிவிட்டு, வீடியோ வைரலானதும் நான் அதற்கு வருத்தப்படுகிறேன் என்று கதறியுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆனால், தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையம், அவரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில், பிரபல சிகையலங்கார நிபுணரான ஜாவீத் ஹபீப் என்பவர் சிகையலங்காரம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அப்போது, சிகையலங்காரம் செய்ய பெண்மணியை இருக்கையில் அமர வைத்த நிலையில், அவரின் தலைமுடி சிக்கலாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பெண்ணிடம் கேள்வி எழுப்பிய ஜாவீத் ஹபீப், தண்ணீர் இல்லாததால் தலைமுடி சிக்கலாக உள்ளது என்று கூறி எச்சிலை உமிழ்ந்து துப்புகிறார். இதனைக்கண்ட அவரது ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பவே, பெண்மணி எதுவும் கூற இயலாத விரக்தி நிலையில் இருந்தார். இந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பெரும் வைரலாகி கண்டனத்தை பெற்றது. 

Uttar pradesh

இந்த வீடியோ குறித்த தகவல் தேசிய பெண்கள் ஆணையத்திற்கு தெரியவரவே, சிகையலங்கார நிபுணர் ஜாவீத் ஹபீபின் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய கூறி அம்மாநில காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. விஷயம் விபரீதம் ஆவதை புரிந்துகொண்ட ஜாவீத் ஹபீப் தனது செயலுக்கு வருந்துவதாக மன்னிப்பு கேட்டுள்ளார்.