மதுவரக்கனால் பயங்கரம்.. பெற்றெடுத்த மகளை பலாத்காரம் செய்த தந்தை.. அதிரவைக்கும் சம்பவம்.!

மதுவரக்கனால் பயங்கரம்.. பெற்றெடுத்த மகளை பலாத்காரம் செய்த தந்தை.. அதிரவைக்கும் சம்பவம்.!


uttar-pradesh-girl-raped-by-her-father

மதுபோதையில் மகள் என்றும் பாராமல் தந்தையே, மகளை பலாத்காரம் செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாந்தா பகுதியில் 49 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வரும் நிலையில், இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தொடர்ந்து இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. 

அத்துடன் தனது மகள்களிடமும் சண்டையிட்டு அடித்து உதைத்திருக்கிறார். அப்போது கடந்த புதன்கிழமை இரவு வழக்கம்போல குடித்துவிட்டு வந்த தந்தை மது போதையில் இருந்ததால், தனது மூத்தமகளை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்ட பெண் வெளியே சொல்ல முடியாமல் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 

இதனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தங்கையிடம் கூறி அழுத நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மன விரக்தியடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த நிலையில், வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த தங்கை, தனது அக்கா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு கதறியுள்ளார். 

Uttar pradesh

இந்த சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்ததை தொடர்ந்து, அவரை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், தனது அக்காவின் தற்கொலை தொடர்பாக தங்கை காவல்துறையில் புகாரளித்து, இதற்கு தனது தந்தை தான் காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.