திருமணமானதை மறைத்து பெண்ணுடன் லிவிங் டுகெதர்.. உண்மையை அறிந்து மனம் துடித்து தூக்கில் தொங்கிய இளம்பெண்.!

திருமணமானதை மறைத்து பெண்ணுடன் லிவிங் டுகெதர்.. உண்மையை அறிந்து மனம் துடித்து தூக்கில் தொங்கிய இளம்பெண்.!Uttar Pradesh Affair Girl Suicide

லிவிங் டூகெதரில் இருந்த பெண்மணி தனது துணைக்கு திருமணம் ஆகிவிட்டதை எண்ணி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத், வேர்ல்ட் சிட்டியில் இளம்பெண் வசித்து வருகிறார். இதே பகுதியில் இளைஞர் ஒருவரும் வசித்து வரவே, இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் லிவிங் டுகெதர் வரை கொண்டு சென்றுள்ளது. 

இருவரும் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால், கைநிறைய சம்பளம் உல்லாச வாழ்க்கை என இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தகராறு ஏற்படவே, பெண்மணி கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும், தனக்கு உறுதுணையாக இருப்பதை போல நடித்த இளைஞனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளதையும் உறுதி செய்துள்ளார். 

Uttar pradesh

இதுகுறித்து இளைஞரிடம் பெண்மணி கேள்வி எழுப்பவே, இளைஞன் பதில் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் மனஉளைச்சலடைந்த பெண்மணி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சகோதரியை காணாது பெண்ணின் வீட்டிற்கு சென்ற அக்கா, தங்கை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அக்கா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இளைஞனை தேடி வருகின்றனர்.