தன்னை கடித்த பாம்பின் தலையை கரகரவென கடித்து துப்பிய நபர்! பின்னர் நிகழ்ந்த அதிசயம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் தன்னை கடித்த பாம்பின் தலையை கரகரவென கடித்து துப்பி மயங்கியுள்ளார். அதனை அடுத்து அவரை சோதித்த மருத்துவர்கள் அந்த நபர் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் ஹார்டா என்ற பகுதியினைச் சேர்ந்த விவசாயி சோனலால். இவர் மயக்கமாகி கிடந்த நிலையில் 108க்கு கால் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் எதுவும் கடித்ததற்கான அடையாளம் இல்லாததால் குழம்பிய நிலையில் காணப்பட்டபோது சோனலால்க்கு மயக்கம் தெளிந்துள்ளது.
பின்னர் அவரின் என்ன நடந்தது என மருத்துவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது அவர் தன்னை பாம்பு ஒன்று கடித்ததாகவும், அதனால் தான் அந்த பாம்பின் தலையை பிடித்து கடித்து துப்பியதால் அந்த பாம்பு இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இருப்பினும் மீண்டும் ஒரு முறை அதன் தலையை எடுத்து கடித்து துப்பியதாக கூறி மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளார். மேலும் பாம்பு கடித்தும் இவர் எப்படி உயிர் பிழைத்தார் என்ற அதிர்ச்சி மருத்துவர்கள் எழுந்துள்ளது. இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.