ஒரே மாசத்துல 8 தடவ கடிச்சுடுச்சு..! சிறுவன் எங்கு சென்றாலும் தேடிவந்து கொத்தும் பாம்பு..! பகீர் சம்பவம்.!

ஒரே மாசத்துல 8 தடவ கடிச்சுடுச்சு..! சிறுவன் எங்கு சென்றாலும் தேடிவந்து கொத்தும் பாம்பு..! பகீர் சம்பவம்.!UP teen claims same snake bit him 8 times in one month

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை ஒரே மாதத்தில் 8 முறை பாம்பு கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரமௌலி. இவருக்கு யாஷ்ராஜ் மிஸ்ரா என்ற 17 வயது மகன் ஒருவர் உள்ளார்.  யாஷ்ராஜ் மிஸ்ராவை பலமுறை பாம்பு கடிப்பதும், அதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இது குறித்து சிறுவனின் தந்தை கூறும்போது எனது மகனை அடிக்கடி பாம்பு கடிப்பது எனது குடும்பத்தினருக்கு மட்டும் அல்லாமல் மருத்துவர்களுக்கும் கூட குழப்பமாக இருப்பதாகவும், தற்போது மூன்றாவது முறையாக ஒரே பாம்பு தனது மகனை கடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Mysterious

பாம்பிற்கு பயந்து தனது அருகில் இருக்கும் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தனது மகனை கொண்டுபோய் விட்டதாகவும் ஆனால் அதே பாம்பை தனது மகன் அந்த கிராமத்தில் பார்த்ததாகவும் கூறியுள்ளார். 

மேலும் அதே பாம்பை பார்த்ததாக கூறிய அடுத்த நாளே அந்த பாம்பு தனது மகனை கொத்தியதாகவும், தற்போது அதற்காக சிகிச்சைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தங்கள் மகனை 8 முறை பாம்பு கொத்தியுள்ளதாகவும், நாங்கள் எங்களால் முடிந்த எல்லாம் முயற்சிகளை செய்தும் இந்த பிரச்சனைக்கான காரணம் என்ன என தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

பாம்பாட்டியை வைத்து பாம்பை பிடிக்க முயன்றதாகவும், பலமுறை பல்வேறு பூஜைகள் செய்துவிட்டதாகவும் கூறும் அவர் தங்கள் மகன் பாம்பு கடிப்பதை நினைத்து கடும் மன உளைச்சலில் அவதிப்படுவதாகவும் எப்போதும் அச்சத்துடன் இருப்பதாகவும், இதற்கு எப்போது ஒரு முடிவு வரும் என தெரியவில்லை என மன வேதனையுடன் கூறியுள்ளார். 

ஒரே சிறுவனை தொடர்ந்து பாம்பு எட்டு முறை கடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.