இந்தியா Corono+

தொழிற்சாலைகள் போல் இயங்கும் சிறைச்சாலைகள்..! மக்களை காப்பாற்ற களமிறங்கிய கைதிகள்..!

Summary:

UP Prisoners in process of making masks

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அணைத்து நாடுகளிலும் வேகமாக பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், நேற்று முதல் 21 நாட்களுக்கு இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் பீதியால் முகக்கவசங்கள், கை கழுவும் திரவங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 71 சிறைகளில் 63 சிறைகள் மாஸ்க் தயாரிக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளன. சிறையில் இருக்கும் கைதிகளை கொண்டு கடந்த 10 நாட்களில் இதுவரை சுமார் 1,24,500 மாஸ்குகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

வெளியில் இருக்கும் மக்களை காப்பாற்ற சிறைச்சாலைகள் தொழிற்சாலைபோல் இயங்கிவரும் நிலையில், கைதிகளும் இதற்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கிவருவதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement