இந்தியா

அது எனக்குத்தான் வேணும்! ரோட்டில் சண்டை போட்ட போலீசார்! வெளியான அதிர்ச்சி காரணம்!

Summary:

UP Policemen beat each other up for the front seat

உத்திர பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் பணிபுரிந்து வரும் ராஜேஷ் சிங்க் மற்றும் சுனில் குமார் என்ற இரண்டு அதிகாரிகள் காவல் துறை சீருடையுடன் ரோட்டில் சண்டை போட்டுக்கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

குறிப்பிட்ட இரண்டு அதிகாரிகளும் ரோந்து பணிக்காக வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு இரண்டு அதிகாரிகளும் ரோட்டில் சண்டை போட்டுள்னனர். இவர்களின் திடீர் சண்டையால் குழம்பிப்போன மற்ற அதிகாரிகள் இருவரையும் சமாதானம் செய்து விலகி விட்டனர்.

பின்னர் இது குறித்து விசாரித்ததில் வாகனத்தின் முன் சீட்டில் யார் அமர்வது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சண்டையாக மாறியுள்ளது. அவர்கள் சண்டை போடும் காட்சி அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டு விடியோவாக வெளியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல் துறை ஆணையர் குழந்தைபோல் சண்டைபோட்டு இரண்டு அதிகாரிகளையும் பதவி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Advertisement