மனைவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

மனைவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!


UP Meerut Women Killed Case 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில், கடந்த ஆண்டு பெண் ஒருவரின் சடலம் சாக்கு மூட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. 

இந்நிலையில், பலியான பெண்ணின் பெயர் பர்வீன் என்பது தெரியவந்தது. அவர் பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கன்ச் பகுதியை சேர்ந்தவர் ஆவார். 

கணவர் சஜித்துடன் மீரட்டில் தங்கி இருந்தபோது, அவர் கணவரால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் அதிகாரிகள் சஜித்தை தேடி வருகின்றனர். 

கொலையை உறுதி செய்து, அவரின் கணவர் சாக்கு மூட்டையில் உடலை எடுத்த வந்த காணொளி தற்போது கிடைத்துள்ளது.