வீடியோ: ஹைடெக் முறையில் பிட்டு!! நினைத்துக்கூட பார்க்க முடியாத இளைஞரின் செயல்.. வைரல் வீடியோ..

வீடியோ: ஹைடெக் முறையில் பிட்டு!! நினைத்துக்கூட பார்க்க முடியாத இளைஞரின் செயல்.. வைரல் வீடியோ..



UP man hides wireless device in wig to cheat during police exam

சப்-இஸ்பெக்டர் பணிக்கான போட்டித் தேர்வில், ஹைடெக் முறையில் காப்பி அடித்து மாட்டிக்கொண்ட நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

நீங்கள் எப்போதாவது தேர்வில் பிட் அடித்துளீர்களா? நீங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் வகுப்புத் தோழன் பதில்கள் எழுதப்பட்ட ஒரு சிறிய காகிதத்தை வெளியே எடுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற வழக்கமான மோசடி நுட்பங்கள் மாணவர்களால் பயன்படுத்தப்பட்ட நாட்கள் போய்விட்டன.

தேர்வு கண்காணிப்பாளர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு பிட் அடிக்கும் முறைகளை நவீன தலைமுறையினர் பின்பற்ற தொடங்கியுள்ளனர். உ.பி. காவல்துறையின் சப்-இஸ்பெக்டர் பணிக்கான போட்டித் தேர்வில் நபர் ஒருவர் பிட் அடித்த விதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎஸ் அதிகாரி ரூபின் ஷர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், சப்-இஸ்பெக்டர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்ற இளைஞர் ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவரது காதில் இரண்டு இயர்போன்கள் இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் அந்த  இயர்போன்கள் எங்கு கனெக்ட் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை அடுத்து அந்த இளைஞரை சோதனை செய்தபோது, அவர் தலையில் ஒரு விக் பொருத்திக் கொண்டு, அதில் ப்ளுடூத் சாதனத்தை பொருத்தியுள்ளார். கேட்ட்டு எழுத இயர்போன்களை காதில் இருந்ததை போலீசார் கண்டனர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.