10 பேர் முன்னாடி இதெல்லாம் என்ன சார்!! பட்டபகலில் மருத்துவமனையில் ஆண் டாக்டர்-இளம் பெண் நர்ஸ் இடையே அடிதடி.. வைரல் வீடியோ..UP doctor and nurse fight video

கொரோனா பணி நெருக்கடியில் மருத்துவரும், செவிலியரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலக நாடுகள் மத்தியில் தற்போது இந்தியா கவனிக்கத்தக்க நாடாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தீவிரமாக பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகர் அரசு மாவட்ட மருத்துவமனையில் பணியில் இருந்த ஆண் மருத்துவரும், இளம் பெண் செவிலியரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக தொடங்கியது.

உடனே இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில், தொடர்ந்து கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் இரண்டு பேருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது தெரியவந்துள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

10 பேர் முன்னிலையில் பணியில் இருக்கும் செவிலியரும், மருத்துவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.