இந்தியா

அதிர்ச்சி.! உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை மரணம்.. தலைவர்கள் இரங்கல்.!

Summary:

UP CM Yogi Adityanaths father Anand Singh Bisht passes away

உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான குறைபாட்டுடன் கடந்த மாதம் மார்ச் 15 ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கியும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.44 மணியளவில் அவர் உயிர் இழந்தார்.

முதல்வரின் தந்தை உயிர் இழந்த செய்தியை அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் அவனிஷ் கே அவஸ்தி உறுதி படுத்தி தனது இறங்கல்களையும் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உத்திரபிரதேச மாநில முதல்வருக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement