இந்தியா உலகம்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் மோடி.!

Summary:

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கு

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தமாக 15 உறுப்பினர் நாடுகள் உள்ளது. இந்த 15 உறுப்பினர் நாடுகளில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், இந்தியா உட்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் உள்ளார்கள்.

பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும். அதன்படி கடந்த மாதம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை பிரான்ஸ் வகித்துள்ளது. இதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான பொறுப்பை இந்தியா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்றுக் கொண்டது.

75ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட உள்ள நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா. சபையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். 


Advertisement