பயங்கர வேகத்தில் மோதிய கார்..! 6 மாத குழந்தை உட்பட மூவர் பரிதாப மரணம்.. துடித்துப்போன குடும்பத்தினர்.!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியதில், 6 மாத குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்தவர்கள் பாவ்னா பாயிஜா (55), இவரது மகள் நமிதா(35 ), இவர்களது உறவினர் குருநாநி (52) ஆகிய முவரும் பிறந்து 6 மாதங்களே ஆன நிஷிகா என்ற பெண் குழந்தையுடன் காரில் வெளியே சென்றுள்ளனர். காரை பாயிஜாவின் மகள் நமிதா ஓடியுள்ளார்.
கார் மும்பை அலி சாலை அருகே வந்தபோது, நமிதாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியுள்ளது. காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமணையில் அனுமதித்த நிலையில், பாவ்னா பாயிஜா, குருநாநி, 6 மாத குழந்தை நிஷிகா மூவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். காரை ஓடிவந்த நமிதா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.