இரட்டை சகோதரிகளின் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம்..ஒரே நாளில் திருமணம்..ஒரே நாளில் பிரசவம்...ஒரே குரூப் இரத்தம்...

இரட்டை சகோதரிகளின் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம்..ஒரே நாளில் திருமணம்..ஒரே நாளில் பிரசவம்...ஒரே குரூப் இரத்தம்...


Twins gave babys same day same hospital

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர் - அம்பிகா தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற இரட்டை பெண் பிள்ளைகள் உள்ளனர். அந்த இரண்டு சகோதரிகளும் சிறு வயது முதல் இணைப்பிரியாமல் ஒற்றுமையாகவே இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இரட்டை சகோதரிகள் இருவருக்கு அவர்களது விருப்பம் படியே ஒரே நேரத்தில் ஒரே மேடையில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து இருவரும் கர்ப்பமான நிலையில் தாங்கள் பிறந்த அதே மருத்துவ மனையில் தங்களுக்கும் பிரசவம் நடைப்பெற வேண்டும் என விரும்பியுள்ளனர்.

Same day

இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இந்நிலையில் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.அதே நாளில் மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் பெண் குழந்தையை பெற்றெடுத்தது மட்டுமின்றி இரண்டு குழந்தைக்கு ஒரே வகையான குரூப் இரத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.