பெண் மந்திரவாதி கொடுத்ததை ஆசையாக சமைத்து சாப்பிட்ட தந்தை, மகன்! இறுதியில் நேர்ந்த துயரம்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

பெண் மந்திரவாதி கொடுத்ததை ஆசையாக சமைத்து சாப்பிட்ட தந்தை, மகன்! இறுதியில் நேர்ந்த துயரம்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நீதிபதி மகேந்திர திரிபாதி(56) என்பவரும் அவரின் மகன் அபியன்ராஜ் கடந்த வார சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுதொர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 20-ஆம் தேதி நீதிபதி மற்றும் அவரது மகன் இரவு உணவாக சப்பாத்தி சாப்பிட்டுள்ளனர். நீதிபதியின் மனைவி மட்டும் சப்பாத்தி சாப்பிடாமல் வேறு சாப்பிட்டுள்ளார். இந்தநிலையில், சப்பாத்தி சாப்பிட்ட சிறிது நேரத்திலே நீதிபதி மற்றும் அவரது மகன் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவருமே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் இருப்பது உறுதி செய்யப்பட்டதுஇதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக பெண் மந்திரவாதிஉள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

அதில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த நீதிபதி, சந்தியா சிங் என்ற பெண் மந்திரவாதியிடம் தன் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என ஆசீர்வாதம் கேட்டுள்ளார். இதனையடுத்து தான் செய்யும் பூஜைகளை செய்தால் வீட்டு கஷ்டங்கள் எல்லாம் சரி ஆகி விடும் என கூறி கடந்த 20-ஆம் தேதி கோதுமை மாவை கொடுத்து வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுமாறு கூறியுள்ளார். அதனை சாப்பிட்ட தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo