டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகி, காங்கிரஸின் முக்கிய பதவிக்கு சென்ற திருநங்கை அப்ஸரா ரெட்டி!.

டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகி, காங்கிரஸின் முக்கிய பதவிக்கு சென்ற திருநங்கை அப்ஸரா ரெட்டி!.



transgender-abshara-join-in-congress


அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டி என்பவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். 

சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் திறம்பட செயல்பட்டு வருபவர் திருநங்கை அப்ஸரா ரெட்டி. அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க.விலும், அதன்பின் டிடிவி தினகரனின் அ.ம.மு.க.விலும் இருந்து பணியாற்றியுள்ளார். 

congressஅதன்பின், தினகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அக்கட்சியில் இருந்து வெளியேறிய இவர், அரசியலில் சில மாதங்கள் ஈடுபடாமல் ஓய்வில் இருந்தார் அப்ஸரா ரெட்டி. இந்நிலையில், அப்ஸரா ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 

அப்ஸரா ரெட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். காங்கிரஸில் இணைந்துள்ள அவருக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பதவியை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.