இந்தியா

வுட்றா வண்டிய பின்னாடி..! முதல் முறையாக பின்னோக்கி சென்ற ரயில்..! நெகிழ்ச்சி சம்பவம்.!

Summary:

Train went backward to save passenger in India

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக ரயில் பின்னோக்கி பயணம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகுல் பட்டீல் என்பவர் அதிவேக ரயிலில் பயணம் செய்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். ராகுல் கீழே விழுந்ததை பார்த்த சக பயணிகள் அவசர சங்கிலியைப் இழுத்து ரயிலை நிறுத்தி ஓட்டுநர் குழுவுக்கு தகவலைத் தெரிவித்தனர்.

விஷயம் அறிந்த ரயில் ஓட்டுநர் குழு, அடிபட்ட பயணியை அப்படியே விட்டு செல்ல மனமில்லாமல் அவரை காப்பாற்ற முடிவு செய்தனர். ரயிலை உடனே பின்னோக்கி இயக்கி  அடிபட்டு கிடந்த பயணியை பத்திரமாக மீது அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனனர்.

இந்த சம்பவத்தால் ரயில் ஒருமணிநேரம் தாமதமாக சென்றாலும், பயணி ஒருவரை காப்பாற்றுவதற்காக ரயிலை பின்னோக்கி இயக்கிய ஓட்டுனர்களுக்கு, பயணிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Advertisement