சிறப்பு ரயிலில் பயணித்த இளம்பெண்ணிற்கு பிரசவ வலி! அழகிய குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி!

சிறப்பு ரயிலில் பயணித்த இளம்பெண்ணிற்கு பிரசவ வலி! அழகிய குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி!



train-passenger-got-child

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில், நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு, தங்குமிடம் மற்றும் வருமானம் இல்லாமல் தவித்தனர். இதனால் பரிதவித்து நின்ற லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமத்திற்கு தண்டவாளம் வழியாகவும், சாலை வழியாகவும் சென்றனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமத்திற்கு செல்வதற்காக சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. 


இந்த ரயில்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.  இதுவரை உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்களுடைய ஊருக்கு போய் சேர்ந்த திருப்தியில் உள்ளனர்.

இந்தநிலையில், தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரில் இருந்து சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டது.  இதில் இளம் கர்ப்பிணி ஒருவர் பயணித்துள்ளார்.  அவர் ஒடிசாவின் பாலங்கீர் நகருக்கு பயணித்துள்ளார். அவருக்கு ரயிலில் பயணம் செய்யும்பொழுதே பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.  இதனால், ரயில் பாலங்கீர் நகரை அடைந்ததும், அங்கிருந்த மருத்துவமனையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. தாய் மற்றும் சேய் இருவரும் நலமுடன் உள்ளனர்.