ஆஸ்பிட்டலில் ரகளை செய்த குடிகார ஆசாமியால் விபரீதம்..!! பரிதாபமாக உயிரிழந்த பெண் டாக்டர்..!!!
கேரளாவில் குடித்துவிட்டு போதையில் சிகிச்சைக்காக வந்த வாலிபரால் இளம் பெண் மருத்துவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் உள்ள கொல்லம் அஜீசியா மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த மருத்துவர் வந்தனா, பயிற்சியின் ஒரு பகுதியாக கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
பூயப்பள்ளியை பகுதியில் வசிக்கும் சந்தீப் என்ற வாலிபர் வீட்டில் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தால் காவல்துறையினர் மற்றும் அவரது உறவினர்கள் அதிகாலை 4 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரா மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட ரகளையில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை அளிக்கும் போது சந்தீப் மருத்துவமனையில் ரகளை செய்துள்ளார். மேலும் அங்கிருந்தவர்களை தாக்கி, மருத்துவ உபகரணைங்களை உடைத்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அங்கிருந்தவர்களை தக்கியுள்ளார். இதில் ஐந்து பேர் படுகாயம் அடைதனர். இதில் மருத்துவர் வந்தனா தாஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவர் வந்தனா உடலில் ஐந்து இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு இருந்தது. மருத்துவர் வந்தனா தாஸ் உயிரிழந்ததை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு மருத்துவ சங்கமான ஐஎம்ஏ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.