இந்தியா Covid-19

மொத்த பாதிப்பில் சீனாவை மிஞ்சினாலும் அந்த விஷயத்தில் ஆறுதல் அளிக்கும் இந்திய புள்ளிவிவரம்!

Summary:

total corono case in india exceeds china

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது சீனாவையும் மிஞ்சிவிட்டது. ஆனால் இறப்பு விகிதத்தில் சீனாவை விட இந்திய குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3718 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85766 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பின் ஆரம்ப புள்ளியாக இருக்கும் சீனாவை விட இந்தியாவில் பாதிப்பு அதிகமாகியுள்ளது. சீனாவில் இதுவரை 82941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்தியாவில் இதுவரை கோரோனோவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2753 ஆக உள்ளது. அதே சமயம் சீனாவில் இறப்பு இதுவரை 4633. இந்தியாவின் இறப்பு விகிதமான 3.2 சீனாவின் இறப்பு விகிதமான 5.5 யை விட குறைவாக உள்ளது.

உலக நாடுகளை பொறுத்தவரை பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1484285 பேர் பாதிக்கப்பட்டு 88507 பேர் உயிரிழந்துள்ளனர். உலக பாதிப்பு பட்டியலில் இந்திய தற்போது 11 ஆவது இடத்தில் உள்ளது.


Advertisement