இந்தியா சமூகம்

பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட டிக்-டாக் பிரபலம்! பிண்ணனி என்ன?

Summary:

Tik tok favourite shoot dead in delhi

டெல்லியை சேர்ந்த 24 வயதான இளைஞர் மோகித் மோர். இவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். டிக்-டாக் ஆப்பில் அடிக்கடி உடற்பயிற்சி குறித்த வீடியோக்களை பதிவிடுவதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். 

இந்த வீடியோக்கள் மூலம் டிக்-டாக் ஆப்பில் பிரபலமான இவரை 5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதுவரை 8 மில்லியன் ஹார்ட்ஸ் வாங்கியுள்ளார். 

இவ்வாறு பிரபலமடைந்து வரும் மோகித் மோர் வழக்கம்போல் நேற்று உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக ஜிம்மிற்கு சென்றுள்ளார். அப்போது ஜிம்மிற்கு அருகில் உள்ள ஸ்டூடியோவில் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக சரியாக 5 மணியளவில் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார். 

ஸ்டூடியோவில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மோகித் மோரை திடீரென துப்பாக்கியுடன் வந்த 3 மர்ம நபர்கள் சராமாரியாக சுட்டனர். கிட்டத்தட்ட 13 குண்டுகள் உடம்பில் பாயந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டடிப்பட்ட மோகித் அதே இடத்தில் சரிந்து உயிரிழந்தார். 

குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டனர். அதில் இரண்டு குற்றவாளிகள் ஹெல்மட் அணிந்துள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் ஹெல்மெட் அணியாததால் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் முகம் பதிவாகியுள்ளது. அதனைக் கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 


Advertisement