இந்தியா

13 உயிர்களை பறித்த பெண்புலி!. தீபாவளி நெருங்கும் நிலையில் டுமீல்.. டுமீல்..!

Summary:

tiger shoot and killed

மகாராஷ்டிர மாநிலம் யாவத்மால் மாவட்டம் பந்தர்கவ்டா வனவிலங்குகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த அவனி என்ற பெண் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 13 பேரை வேட்டையாடியுள்ளது. 

 கடந்த 2 வருடமாகவே அப்பகுதியில் மக்கள் பதட்டத்துடனும் பயத்துடனும் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பலரது உயிர்களைப் பறித்து வரும் இந்தப் புலியை கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட்டது.

avni tiger க்கான பட முடிவு

இந்த நிலையில் நேற்று இரவு அவனி என்ற பெண்புலி சுட்டுக் கொல்லப்பட்டது. கொல்லப்பட்ட அவனிக்கு 10 மாதத்தில் 2 குட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் கொடூரப் புலியாக இருந்தாலும் இப்படி வேட்டையாடி கொல்லப்பட்டது வருத்தம் தருவதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில், சிலர் அந்த புலியை கொன்றதற்காக மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறிவருகின்றனர்.


Advertisement