பரபரப்பு வீடியோ! திறந்தவெளி ஜீப்பை துரத்திய புலி; பயத்தில் அலறிய சுற்றுலா பயணிகள்!

tiger chasing video in andheri tiger reseve


tiger-chasing-video-in-andheri-tiger-reseve

திறந்தவெளி ஜீப்பை துரத்திய புலி; பயத்தில் அலறிய சுற்றுலா பயணிகள்; பரபரப்பு வீடியோ!

மகாராஷ்டிரா தடோபா அந்தேரி தேசிய பூங்காவில் திறந்தவெளி ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை புலி ஒன்று துரத்திய வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

மகாராஷ்டிரா தடோபா அந்தேரி தேசிய பூங்காவில் புலிகள் நடமாடும் பகுதிக்கு திறந்தவெளி ஜீப்பில் சென்ற சுற்றுலாப்பயணிகளை பெண் புலி ஒன்று துரத்தியுள்ளது. இதனால் ஜீப்பில் இருந்த பயணிகள் பயத்தில் அலறும் சத்தம் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஜீப்பில் இருந்த சக பயணி ஒருவர் புலி துரத்தும் காட்சியை வீடியோவாக எடுத்துள்ளார்.

இதைப்பற்றி விளக்கமளித்துள்ள புலிகள் காப்பகம், "இந்த சம்பவம் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் இந்த வீடியோ இப்போது தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர்களைத் துரத்தியது சோதி மது என்ற சிறிய பெண் புலி. இது சுற்றுலா பயணிகளை தாக்குவதற்காக துரத்தவில்லை. அவர்களை தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துரதியிருந்தால் புலியானது நிச்சயம் வண்டியின் மீது தாவி இருக்கும்" என்று விளக்கம் அளித்துள்ளனர்.