அம்மா... அம்மா.. வா.. மா.. போகலாம்.! கொரோனா வார்டில் பணியாற்றும் தாய்யை பார்த்ததும் கதறி அழும் 3 வயது குழந்தை.!

அம்மா... அம்மா.. வா.. மா.. போகலாம்.! கொரோனா வார்டில் பணியாற்றும் தாய்யை பார்த்ததும் கதறி அழும் 3 வயது குழந்தை.!


three-year-old-daughter-of-nurse-in-quarantine-longing

கொரோனா வார்டில் பணிபுரிந்துவரும் தனது தாயை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த மகளின் பாசப்போராட்டம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்த சுனந்தா(31) என்ற பெண் அதேமாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த 4 வருடங்களாக வேலை பார்த்துவருகிறார்.

தற்போது அந்த மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு பிரிவில் சுனந்தாவும் பணியாற்றிவருகிறார். கொரோனா பிரிவு என்பதால் சுனந்தா வீட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 15 நாட்களாக சுனந்தா வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையிலையே பணியாற்றிவருகிறார்.

corono

இந்நிலையில், சுனந்தாவுக்கு ஐஸ்வர்யா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளார். அம்மாவை நீண்ட நாட்களாக பார்க்காத ஐஸ்வர்யா தனது அம்மாவை பார்க்கவேண்டும் என தந்தையிடம் தினம் அழுதுள்ளார். இதனால் சுனந்தாவை எப்படியாவது மகளிடம் காட்ட வேண்டும் என்றும் தனது மகளை தூக்கிக்கொண்டு சுனந்தா பணியாற்றும் மருத்துவமனையின் வாசலுக்கு வந்துள்ளார் சுனந்தாவின் கணவர்.

இந்த தகவல் சுனந்தாவுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையின் வாசலுக்கு ஓடிவந்தார். ஆனால், குழந்தையின் கிட்டே செல்ல சுனந்தாவுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில், தூரத்தில் இருந்து தனது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது அம்மாவை பார்த்த அந்த 3 வயது குழந்தை, ‘அம்மா... அம்மா.. வா.. மா.. போகலாம்...’ என்று கதறி அழுகிறார்.

மகள் அழுவதை பார்த்து தாயும் கண்ணீர் சிந்த அங்கிருந்தவர்கள் அனைவரும் இந்த காட்சியை பார்த்து ஒருநிமிடம் கண்கலங்கி போனார்கள். இவ்வளவு உயிர்கள், உறவுகள், உணர்வுகளை பிரித்து பந்தாடும் இந்த கொரோனாவுக்கு எப்போதுதான் விடிவுகாலம் வருமோ..