இந்தியா

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Summary:

This month gas silendar rate

உலகம் முழுவதும் கொரோனா எதிரொலியால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்ப்படும் மாற்றத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து கொண்டே வருகின்றனர்.

கடந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சராசரியாக ₹54 குறைந்து 826 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹66 வரை குறைந்து ₹761.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கொரோனா வைரஸின் எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி குறைக்கப்பட்டதாக எண்ணெய் விற்பனை நிலையங்கள் அறிவித்துள்ளன. 


Advertisement