
thirumala temple closed
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு கோயில் தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது.
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. மேலும் மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது. இந்தநிலையில் திருமலை திருப்பதிக்கு வந்த வட இந்திய பக்தருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், திருமலைக்குச் செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான்சுவாமிக்கு பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கு பிறகு நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது. 1892-ம் ஆண்டு, 2 நாட்கள் கோவில் மூடி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றது.
Advertisement
Advertisement