திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியாவிட்டாலும் இனி திருப்பதி லட்டு கிடைக்கும்! புதிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியாவிட்டாலும் இனி திருப்பதி லட்டு கிடைக்கும்! புதிய அறிவிப்பு!


thirumala-ladu-will-sale

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏழுமலையானைத் தரிசிக்க முடியாமல் தவிக்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என ஏராளமான பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து கோரிக்கை வந்தனர்.

திருப்பதி என்றாலே லட்டுதான் நினைவுக்கு வரும். திருப்பதிக்கு வரும் யாரும் இதை வாங்காமல் செல்ல மாட்டார்கள். பல இடங்களில் லட்டுகள் கிடைக்கும் ஆனால் திருப்பதி லட்டிற்கு தனிச்சுவை உண்டு.  ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இல்லாவிட்டாலும், சாமிக்கு வழக்கமாக நடக்கும் நித்திய பூஜைகள் நடக்கின்றன. 

thirumala

இந்தநிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்றுப் ஒரு லட்டு பாதி விலையில் அதாவது 50 ரூபாய்க்குப் பதிலாக இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு லட்டு என விற்கத் தேவஸ்தானம் முன் வந்துள்ளது. மேலும்,அதிக எண்ணிக்கையில் லட்டு தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தானத்தை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று திருப்பதி மலையிலிருந்து இரண்டு லாரிகள் லட்டு நிரப்பப்பட்டு ஆந்திராவின் 7 மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இம்மாதம் 25 ஆம் தேதி முதல் ஆந்திராவில் உள்ள அனைத்து தேவஸ்தான தகவல் மையங்களிலும் லட்டு பிரசாதம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.