இந்தியா

90 கிலோ மனைவி.! இரண்டு பிள்ளைகள்..! இரவு முழுவதும் சைக்கிள் மிதித்த ராஜேஷிற்கு காலையில் காத்திருந்த அதிர்ச்சி..! கண்ணீர் சிந்திய கண்கள்..!

Summary:

These laborers set out for home hundreds of km away after sitting on a bicycle to wife and children

ஊரடங்கு காரணமாக வெளிமாநிலத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தனது சொந்த ஊருக்கு திரும்பும் முயற்சியில் 30 கிலோமிட்டர் சைக்கிளில் சென்றநிலையியல் போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தொழிலார்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல சிரமப்பட்டுவரும் நிலையில், சிலர் நடந்தும், சிலர் சைக்கிள், லாரி போன்ற வாகனங்களிலும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிவருகின்றனர்.

இந்நிலையில், ஹிசாரில் இருந்து உ.பி.யின் பரேலி மாவட்டத்திற்கு தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இரவு முழுவதும் சைக்கிள் மித்தித்து சுமார் 30 கிலோமீட்டர் கடந்து ஹன்சி என்ற பகுதிக்கு வந்துள்ளார் ராஜேஷ் என்ற கூலி தொழிலாளி.

அவரை ஹன்சியில் வழிமறித்த போலீசார் இதற்கு மேல் செல்ல அனுமதி இல்லை என கூறி அவரை திரும்ப அனுப்பியுள்ளனர். இதனை கேட்டு ராஜேஷ் கண்களில் கண்ணீர் சிந்தியது. குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்பதாகவும், தன்னிடம் பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு சைக்கிளில் செல்வதாக கூறியும் எந்த பலனும் இல்லை.

இதனை அடுத்து மீண்டும் அந்த 30 கிலோ மீட்டரை சைக்கிளில் கடந்துள்ளார் ராஜேஷ்.


Advertisement