பதறவைக்கும் வீடியோ காட்சி.. பைக்கில் வந்த மூன்று பேர்.. வேகமாக வந்த கார்.. நொடிப்பொழுதில் நடந்த கொடூர விபத்து..

பதறவைக்கும் வீடியோ காட்சி.. பைக்கில் வந்த மூன்று பேர்.. வேகமாக வந்த கார்.. நொடிப்பொழுதில் நடந்த கொடூர விபத்து..


Thelungana bike car accident viral cctv video

தெலுங்கானாவில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சிட்டியாலா சந்தியில் இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த மூன்று இளைஞர்கள் சாலையை கடக்க முயன்றனர். அப்போது சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த அந்த இளைஞர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சிசிடிவி கேமிராவில் விபத்து நடந்த காட்சிகள் பதிவாகி இருந்தநிலையில் தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, பார்ப்போரை பதறவைத்துள்ளது.

இதனிடையே விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவரும் போலீசார், காரை ஓட்டிவந்த ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த கொடூர விபத்து அந்த பகுதி முழுதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.