இந்தியா லைப் ஸ்டைல்

39 மனைவிகள்.! 94 குழந்தைகள்.! மொத்தம் 180 பேருடன் ஒரே வீட்டில் வாழும் இந்தியர்.! அசைக்க முடியாத சாதனை.

Summary:

The worlds biggest family lives in Indias Mizoram

குடும்பம், கலாச்சாரம் இவற்றிற்கு பெயர் போனது நம் நாடு. முன்பெல்லாம் மக்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்துவந்தனர். சொந்த பந்தங்களுடன் குடும்பமே குதூகலமாக இருக்கும். ஆனால், தற்போதைய வாழ்க்கைமுறை நம் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துவிட்டது.

கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல், வேலை, படிப்பு, தனிக்குடித்தனம் இப்படி ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு குடும்ப உறுப்பினர்கள் வேறு வேறு இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய காலத்தில் குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலே சண்டை வந்துவிடுகிறது.

இந்நிலையில், 39 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்திவருகிறார் இந்தியாவின் மிசோராம்மை சேர்ந்த சியோனா சானா என்ற நபர்.39 பெண்களை திருமணம் செய்துகொண்ட சியோனா சானாவிற்கு மொத்தம் 94 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் சிலருக்கு திருமணம் முடிந்துள்ளநிலையில் 14 மருமகள்கள் உள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல், 34 பேரக்குழந்தைகள் என மொத்தம்  சியோனா சானவை சேர்த்து 181 பேர் ஒரே வீட்டில் வசித்துவருகின்றனர். மேலும் ஒரு தொழிற்சாலை போல் இயங்கும் இந்த குடும்பத்தில், ஒருநாளைக்கு சுமார் 50 கிலோ வரை சமையலுக்கு அரிசி பயன்படுத்துகிறார்களாம்.


Advertisement