கள்ளக்காதலனுடன் ஓட்டம் எடுத்த மனைவி.. தடபுடலாக கறி விருந்து வைத்து கொண்டாடிய கணவன்..வீடியோ வைரல்..!



the-wife-who-ran-away-with-the-thief-the-husband-celebr

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகராவில் வசித்து வரும் திருமணமான இளம் பெண் ஒருவர் தனது கணவனை விட்டுவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக மனைவிமார்கள் கணவனை விட்டு பிரிந்து சென்றாலோ அல்லது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் எடுத்தாலோ கணவன்மார்கள் சோகத்தில் முழுவது வழக்கம். ஆனால் இதற்கு எதிர்மறையாக கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மனைவி வேறு ஒருவருடன் ஓடியதையடுத்து சில நாட்கள் மனக் கவலையில் இருந்துள்ளார்.

KERALA

இந்நிலையில் திடீரென்று தனது உறவுக்காரர்கள் 250 பேரை தனது வீட்டிற்கு  அழைத்து அவர்களுக்கு தடபுடலாக கறி விருந்து, பிரியாணி மற்றும் மது பாட்டில்கள் வாங்கி கொடுத்து தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதை குத்தாட்டம் போட்டு கொண்டாடி அசத்தியுள்ளார். மேலும் இச்சம்பவம் பற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.