குடிபோதையில் நோயாளிக்கு டயாலிசிஸ் செய்த டெக்னீஷியன்.. பறிபோன நோயாளியின் உயிர்..!



The technician who dialyzed the patient while drunk.. The patient lost his life..!


 கர்நாடக மாநிலத்தில் விஜயபுரா, இன்டியின் மாவினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிஸ்மில்லா நதாப். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் பிஸ்மில்லா நதாப் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் இன்டி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இதனால் வழக்கம் போல் டயாலிசிஸ் செய்து கொள்ள பிஸ்மில்லா நதாப், இன்டி அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு டயாலிசிஸ் பிரிவில் பணிபுரியும் டெக்னீஷியன் இல்லாததால் பிஸ்மில்லா நதாப் காத்துகொண்டிருந்தார். 

karnataka

இதனையடுத்து டயாலிசிஸ் டெக்னீஷியன் பசவராஜ் கால தாமதமாக அதுவும் மது அருந்திவிட்டு தள்ளாடியபடி வந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிஸ்மில்லா நதாப் குடும்பத்தினர் அந்த டெக்னீஷியனிடம் நீங்கள் போதையில் தள்ளாடும் நிலையில் இருப்பதால் நீங்கள் நோயாளிக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளனர். 

இதனை சற்றும் பொருட்படுத்தாமல் டெக்னீஷியன் பசவராஜ் நோயாளியான பிஸ்மில்லா நதாப் கையில் டயாலிசிஸ் உபகரணங்களை பொருத்தியுள்ளார். ஆனால் டெக்னீஷியன் போதையில் இருந்ததால் டயாலிசிஸ் உபகரணத்தை சரியாக பொருத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் நோயாளியின் உடம்பிலிருந்து ரத்தம் வெளியேற தொடங்கியுள்ளது. 

karnataka

இதனால் திடீரென நோயாளியின் கையில் பொருத்தப்பட்டிருந்த உபகரணங்களை, டெக்னீஷியன் பசவராஜ் பிடுங்கி எறிந்துவிட்டார். இதனால் பிஸ்மில்லா நதாப் கையில் இருந்து அதிக அளவில் இரத்தம் வெளியேறி சில நொடிகளில் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும்  பிஸ்மில்லா நதாப் இறந்து 2 மணி நேரமாகியும் மருத்துவமனை அதிகாரிகள் அங்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கோபமுற்ற உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த இன்டி காவல்துறையினர் டயாலிசிஸ் பிரிவு டெக்னீஷியன் பசவராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.