இந்தியா

நாயை காரில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற கொடூரன்.! அதனை பார்த்து பதறிப்போன இளைஞன் செய்த செயல்.!

Summary:

கேரளாவில் நாயின் கழுத்தில் கயிற்றைக்கட்டி காரில் இழுத்துச்சென்ற கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள நெடும்பாசேரி பகுதியில், கார் ஒன்றின் பின்புறம் நாய் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் கார் செல்லும்போது நாய் பின்புறமாக ஓடியுள்ளது. ஒருகட்டத்தில் அந்த நாய் கீழே விழுந்து சாலையில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டது.

அப்போது அந்த வழியாக சென்ற  இளைஞர் ஒருவர், நாய் கீழே விழுந்து சாலையில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட பரிதாப நிகழ்வை தனது செல் போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள செம்மநாடு போலீஸார், காரை ஓட்டிச்சென்ற நபரை தேடி வந்தனர். இந்தநிலையில் அந்த கொடூரச்செயலை செய்தவர் திருவனந்தபுரம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த யூசுப் என்பதும் அவர் கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநராக உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த காரை இயக்கிய யூசுப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


Advertisement