பதைபதைக்கும் வீடியோ...திடீரென ஊருக்குள் புகுந்த யானையால் 30 வயது இளைஞருக்கு நிகழ்ந்த பரிதாபம்...The man was admitted to a hospital for treatment and the elephant was chased towards jungle area

அசாமில் காட்டிலிருந்து திடீரென ஊருக்குள் புகுந்த யானை இளைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசாமின் துப்ரி மாவட்டத்தின் தமாரட் என்னுமிடத்தில் திடீரென காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனை அங்கிருந்த சிலர் வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது அந்த யானை அங்கிருந்த இளைஞர் ஒருவரை துரத்தியுள்ளது.

உடனே அந்த இளைஞர் அலறி அடித்து கொண்டு ஓடிய போது தடுமாறி கீழே விழுந்துள்ளார்.யானை தனது தும்பிக்கையால் அந்த இளைஞரை தூக்கி பந்தாடியுள்ளது. அதில் அந்த இளைஞருக்கு பயகாயமடைந்துள்ளது. இந்நிகழ்வை நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.