மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
நாட்டையே உலுக்கிய சம்பவம்.. குழந்தைகள் தினத்தன்று கிடைத்த நீதி.. நீதிமன்றத்திற்கு தலைவணங்கிய மக்கள்..!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா சூர்ணிக்கரை பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த ஜூலை 28ஆம் தேதி காணாமல் போய் உள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆலுவா போலீஸில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான அஸ்பாக் ஆலம் என்பவர் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அஸ்பாக்கை கைது செய்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அஸ்பாக் ஆலம் மீது கடத்தல், பலாத்காரம், கொலை ஆகிய 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்ட ஒரு மாதத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 4ம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் அஸ்பாக் ஆலம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி சோமன் அறிவித்தார். மேலும் அஸ்பக் ஆலமிர்க்கு பல்வேறு பிரிவுகளில் 5 ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பை நீதிபதி அறிவித்தார். மேலும் இந்த தீர்ப்பானது குழந்தைகள் தினத்தன்று கிடைத்த நீதி என்றும் நீதிமன்றம் மீது பெரிய நம்பிக்கை வந்துவிட்டதாகவும் கூறி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.