சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயில் முன் தள்ளிவிட்ட கொடூரம் !! இளைஞர் போக்சோவில் கைது!!The girl was sexually harassed and thrown in front of the train. Arrested in Youth Pocso!!

உத்திர பிரதேசம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தொழில்முறை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வகுப்பு முடிந்து வீட்டிற்கு மாணவி இரயிலடி பாதை வழியாக சென்றுள்ளார்.

அப்போது சிறுமியை பின்தொடர்ந்து விஜய் மௌரியா என்ற ஒரு இளைஞர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைக் கண்டு அசச்சமுற்ற சிறுமி அவனிடமிருந்து தப்பிக்க இரயில் தண்டவாளத்தை ஒட்டி ஓடி சென்றுள்ளார். 

UttarPradesh

இதனைத் தொடர்ந்து விடாமல்  துரத்தி சென்ற இளைஞர் ஒரு கட்டத்தில் தண்டவாளத்தில்  சிறுமியை தள்ளி விட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வந்த இரயில் சிறுமி மீது மோதியதில் அவரது ஒரு கை மற்றும் இரு கால்களும் துண்டிக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார்.  
இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விஜய் மௌரியாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.